அன்புள்ளவர்களுக்கு ஆசிகள்
அன்புள்ளவர்களுக்கு ஆசிகள்
வலி.
கிழக்கு வைசமய அருள்நெறி மன்றம் ஸ்தாபித்து சமய சமூகப்பணியாற்ற
முன்வந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றோம். செயல்திறன் கொண்ட
தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் இவர்களோடு பல்துறை சார்ந்த
சிறப்பாளர்களும் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. இதனில்
எங்களையும் இணைத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.
தங்களுடைய இப்பணி மென்மேலும் வளர்ச்சியடைந்து சமுதாயத்திற்கு வழிகாட்ட
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
“என்றும் வேண்டும் இன்ப அன்பு”
இரண்டாவது குருமஹா சந்நிதானம்
சிறீலசிறீ சோமசுந்தர தேசிக
ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
“அகவை அறுபதில்
நிறைவுடன் வாழ்க”

அறுபதில் சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்து தமிழர் தம் கலை,
கலாசாரத்திற்கும் ஆன்மீகத்துறைக்கும் சிறந்த தொண்டாற்றி வரும்
சைவப்புலவர், சிவநெறிக் கலாநிதி, இராசையா ஸ்ரீதரன் அவர்கள் தன்
சொற்பெருக்காலும் வில்லிசையாலும் எழுத்தாற்றலாலும் அகிலத்தை
நெறிப்படுத்தும் பண்பாளர்.இறையருளால் நீண்ட காலம் வாழ்ந்து
சிவப்பணியாற்ற இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்.
சிவஸ்ரீ.சோ.இ.பிரணதார்த்திஹரக்குருக்கள்
தலைவர்,
வலி.கிழக்கு. சைவசமய அருள்நெறிமன்றம்,
கோப்பாய்.
மன்றத்தின்
சேவைகள்
1. மக்கள் மத்தியில் சைவநெறி
ஆன்மீகத்தை வளர்ப்பது.
2. சமயம் தொடர்பான பிரச்சாரம், கருத்தரங்குகள் மக்கள் மத்தியில்
ஏற்பாடு செய்வது.
3. சமய அறிவுப்போட்டிகள் மற்றும் சமயம் தொடர்பான போட்டிகளை நடாத்துதல்
மூலம் மாணவர்களைக் கல்வி மேம்பாடடையச் செய்தல்.
4. சமய நாயன்மார்கள் பெரியோர்களின் தினங்களைக் கொண்டாடுதல்.
5. மாணவர்களுக்கு சமயம், தமிழ், கணினி அறிவினை வளர்க்க இலவசமாக
வகுப்புகள் நடாத்துதல்.
6. வருடாந்தம் நடைபெறும் விழாவில் தமிழ், சைவம், கலை, கலாசாரத்துக்கு
தொண்டு செய்யும் அறிஞர்களைக் கௌரவித்தல்.
7. நலிவுற்ற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான செயற்பாடுகள்.
மேற்படி மன்றத்தின் நிரந்தர அங்கத்தவராக சேர்ந்து சேவைக்கு துணை
செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தொடர்புகளுக்கு
0094 213214013
வீரபத்திரர் கோவிலடி
கோப்பாய் தெற்கு கோப்பாய்